உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.36 கோடி மோசடி செய்தவர் மீது குண்டர் சட்டம்

ரூ.36 கோடி மோசடி செய்தவர் மீது குண்டர் சட்டம்

திருநெல்வேலி:துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் 46. தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் பல்வேறு நபர்களிடம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணியிடம் வாங்கித் தருவதாக கூறி 36 கோடியே 13 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். வேலை வாங்கித்தராததால் புகார்கள் வந்தன. அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் லட்சுமிபதிக்கு எஸ்.பி., பாலாஜி சரவணன் பரிந்துரைந்தார். கலெக்டர் உத்தரவின்படி போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி