உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி கஞ்சா பதுக்கியதாக கைது

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி கஞ்சா பதுக்கியதாக கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக போலீசார் ரோந்து நடத்தி, கஞ்சா விற்றதாக 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்நிலையில், துாத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள இனிகோ நகரில், ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தென்பாகம் போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி, 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த வீடு, நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி பாஸ்கர், 44, என்பவருக்கு சொந்தமானது. பாஸ்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை உட்பட பல வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை