| ADDED : செப் 22, 2011 12:09 AM
தூத்துக்குடி : பழுதடைந்த மின்வாரிய குடியிருப்புகளை செப்பணிட கோரி
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர். மஸ்தூர் ஊழியர்களை அவரவர் பணி ஏற்பு செய்த பிரிவுகளில் மட்டும் பணிக்கு
பயன்படுத்த வேண்டும், பணியிடம் காலியுள்ள பிரிவுகளுக்கு பகுதிநேர ஊழியரை
நியமிக்க வேண்டும், பழுதடைந்த வாரிய குடியிருப்பு மற்றும் அலுவலகங்களை சீர்
செய்ய வேண்டும், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முதல் விநியோக பிரிவு
அலுவலகம் வரை உள்ள வாரிய அலுவலகங்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்க
வேண்டும், வாரிய பணிகளுக்கு தேவையான தரமான தளவாட சாமான்கள், எழுது
பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுபாடின்றி வழங்க வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு
சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. தர்ணா போராட்டத்திற்கு திட்ட தலைவர்
ரவிதாகூர் தலைமை வகித்தார். சிஐடியு., மாநில துணைத் தலைவர் செல்லப்பன்,
மாவட்டச் செயலாளர் குமாரவேல், திட்ட துணைத் தலைவர் சேர்மன், திட்ட செயலாளர்
திருத்துவராஜ், கோட்ட செயலாளர்கள் மாரியப்பன், சூசைராஜ், கணேசன் உட்பட
பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு மின்
ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.