உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மக்கள் ஆன்லைனில் இழந்த பணம் மீட்பு

மக்கள் ஆன்லைனில் இழந்த பணம் மீட்பு

தூத்துக்குடி:துாத்துக்குடியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் கிடைக்கும் என நம்பி லட்சக்கணக்கில் இழந்தவர்களின் பணம் மீட்கப்பட்டது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்த மாரியப்பசாமி மனைவி ரேகா. ஆன்லைனில் ப்ராடக்ட் ரேட்டிங் தருவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகர அறிவிப்பை நம்பி வங்கி கணக்கு மூலம் 14 லட்சத்து 12 ஆயிரத்து 849 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த பனிமய கிளாட்வின் என்பவர் மருந்து ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என நம்பி 36 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாயை வங்கி மூலம் செலுத்தி ஏமாந்தார். தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் முகமது அப்துல் காபர் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக நம்பி ஒரு லட்சம் அனுப்பி ஏமாந்தார். இதுபோல ஏமாந்த பலரும் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.எஸ்.பி.பாலாஜி சரவணன், கூடுதல் எஸ்.பி.உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான குழுவினர் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் 13 லட்சத்து 36 ஆயிரத்து 530 மீட்டு நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதுவரை 28 வழக்குகளின் நடவடிக்கை எடுக்கப்பட்டு 46 லட்சம் ரூபாய் நீதிமன்றம் மூலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ