மேலும் செய்திகள்
ரூ.85 லட்சம் மோசடி செய்த வாலிபர்கள் இருவர் கைது
15 minutes ago
திருச்செந்துார் கோயிலில் ரீல்ஸ் எடுக்க தடை
20-Nov-2025
கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு
19-Nov-2025
துாத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற, 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதியில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். படகில் ஏற்றுவதற்காக தயாராக 15 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 1.50 கோடி ரூபாய். அவற்றை கியூ பிரிவு போலீசார் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விசாரிக்கின்றனர்.
15 minutes ago
20-Nov-2025
19-Nov-2025