உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காத்திருப்போர் பட்டியலில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர்

காத்திருப்போர் பட்டியலில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் யேசு ராஜசேகரன், 48. இவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி., மூர்த்தி உத்தரவிட்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல் நிலையத்தில் யேசு ராஜசேகரன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது, வேலை வாங்கித் தருவதாகவும், போலி பணி நியமன ஆணைகளை கொடுத்தும், 27 பேரிடம், 1.47 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி யேசு ராஜசேகரனுக்கு எஸ்.பி., சம்மன் அனுப்பியிருந்தார்; அவர் ஆஜராகாமல் இருந்தார்.இதையடுத்து, கன்னியாகுமரி டி.எஸ்.பி., மகேஷ்குமார் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் சாத்தான்குளத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகரனின் வீட்டுக்கு வந்தனர். உடனே, காரில் நாகர்கோவில் சென்ற யேசு ராஜசேகரன், எஸ்.பி., சுந்தரவதனம் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து, அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, டி.ஐ.ஜி., மூர்த்தி நேற்று உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே, யேசு ராஜசேகரன் மீதான வேலை மோசடி வழங்கில் தொடர்புடைய கனகதுர்கா என்பவரை, போலீசார் விரைவில் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது, இன்ஸ்பெக்டர் மீதான முறைகேடுகள் அம்பலமாகும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V.Rajamohan
அக் 25, 2024 22:30

இவர்கள் நம்மள காவல் காக்கவா. .?? விளங்கிடும்..


அப்பாவி
அக் 25, 2024 01:40

கொஞ்ச நாள் காத்திருங்க. சத்தம் அடங்குனதும் இன்னும் நல்ல பசையான இடத்தில் மாற்றல் குடுத்திருவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை