உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அரிசி தின்ற மாணவி மூச்சுத் திணறி மரணம்

அரிசி தின்ற மாணவி மூச்சுத் திணறி மரணம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனுாரை சேர்ந்த ராமசாமி மகள் மாலதி, 11. காட்டுநாயக்கன்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தார். நேற்று முன் தினம் மாலை, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாலதி, வீட்டில் இருந்த அரிசியை சாப்பிட்டார்.திடீரென மயங்கி விழுந்த மாலதியை, எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் ஆட்டோவில் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே மாலதி உயிரிழந்தார்.அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாணவி மாலதி உயிரிழந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறினர். மாலதி உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை