உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மெட்ரிக் பள்ளிகளுக்கு சமச்சீர் புத்தகங்கள் விநியோகம்

மெட்ரிக் பள்ளிகளுக்கு சமச்சீர் புத்தகங்கள் விநியோகம்

கோவில்பட்டி : கோவில்பட்டியில் மெட்ரிக் பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகம் துவங்கியது. சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்கள் குறித்த பிரச்னைகள் முடிவுக்கு வந்ததையடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்கள் விநியோகம் துவங்கியது. இதில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுமார் 63 பள்ளிகளும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 78 மெட்ரிக் பள்ளிகளும் பாடப்புத்தகங்கள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதன்படியே கோவில்பட்டியிலுள்ள தமிழ்நாடு பாடநூல் கழக சேமிப்பு இடங்களிலிருந்து மெட்ரிக் பள்ளிகள் புத்தக விநியோகம் துவங்கியது. தொடர்ந்து பள் ளி முதல்வர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் செலுத்த வேண்டிய கட்டணத்தை 5 சதவீதம் தள்ளுபடி தொகையை கழித்து டிடி வழங்கி பெற்றுக்கொண்டனர். இதில் 2 ம் வகுப்பிற்கு ரூ .190ம், 3,4,5ம் வகுப்பிற்கு 237.50 பைசாவும், 7 மற்றும் 8 ம் வகுப்பிற்கு 285ம், 9 மற்றும் 10 ம் வகுப்பிற்கு ரூ 332.50 செலுத்தி பெற்றுக்கொண்டதாக தூத்துக்குடி மற்றம் விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் முருகன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை