உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இன்னர்வீல் கிளப் சார்பில் 5ம் ஆண்டு மகளிர் மேளா

இன்னர்வீல் கிளப் சார்பில் 5ம் ஆண்டு மகளிர் மேளா

தூத்துக்குடி : இன்னர்வீல் கிளப் சார்பில் தூத்துக்குடியில் 5வது முறையாக மகளிர் மேளா நடந்தது. தூத்துக்குடி ஸ்பிக் நகர் இன்னர்வீல் கிளப் சார்பில் 5வது முறையாக 'மகளிர் மேளா' நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி சிவன் கோவில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் மகளிர் மேளாவை ஏ.எஸ்.பி.,சோனல் சந்திரா தொடங்கி வைத்தார். மகளிர் மேளாவில் ரங்கோலி, மெகந்தி, பாட்டு ராணி, ஆடல், பாடல், சமையல் உட்பட பல போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நாகர்கோவில் ஷாஜகான் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சீனத் ஷாஜகான் பரிசுகளை வழங்கினார். மேலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பெண்களுக்கு வெள்ளி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டது. மகளிர் மேளா நுழைவு கட்டணம் மூலம் பெற்றப்பட்ட நன்கொடை சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் போன்றவை நடத்த இன்னர்வீல் கிளப் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கிளப் தலைவர் லீனா சுதர்சன், செயலாளர் கவிதா சங்கர், பொருளாளர் ஆஷா இளங்கோ, துணைத் தலைவர் புனிதவதி சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி