மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி : அரசு அறிவித்துள்ளபடி வானங்களில் நம்பர் பிளேட் எழுதாவிட்டால் வாகனத்தின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்துத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இதுபோன்ற தண்டனையில் இருந்து தப்பிக்க உடனடியாக நம்பர் பிளேட்டை அரசு உத்தரவுப்படி மாற்றி விடுவது நல்லது. தமிழகத்தில் வாகனங்களின் நம்பர் எழுதுவதில் புதிய நடைமுறை புகுத்தி போக்குவரத்துதுறை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆலோசனையின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன், பாத்திமாபர்வீன் வாகன சோதனை மேற்கொண்டு மக்களுக்கு இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டிரைவிங் ஸ்கூல்கள், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டர் பேனர்கள் வைக்கப்பட்டன. வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்ட அவகாசம் 31.8.2011 முடிந்தது. இதனை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஒரு மாவட்டத்திற்கு சென்று சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடியில் ஆர்.டி.ஓ ராமலிங்கம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பாத்திமாபர்வீன் ஆகியோர் இது சம்பந்தமாக தொடர் சோதனை மேற்கொண்டு நம்பர் பிளேட் மாற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அடுத்த அதிரடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் வாகன புதிய சட்டத்தின் படி வாகனங்களில் நம்பர் எழுதாத வாகனங்களின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக இவை அமல்படுத்தப்பட்டு விட்டதால் இனிமேல் சிக்கும் வாகனங்களில் பதிவுச்சான்று ரத்தாகும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் போக்குவரத்து அதிகாரிகளின் ஒட்டு மொத்த சோதனை இன்னும் சில நாட்களில் தூத்துக்குடியில் நடக்கும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025