உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் வரும் 13ம் தேதி கொடை விழா

ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் வரும் 13ம் தேதி கொடை விழா

ஏரல் : ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. ஏரல் ஒன்பது தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டு கொடை விழா நிகழ்ச்சிகள் ஏழு நாட்கள் நடக்கிறது. நாளை முதல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. நாளை இரவு 7 மணிக்கு கொலுமேளம், இரவு 10 மணிக்கு ஊர்அழைப்பு, இரவு 1 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது. 13ம் தேதி கொடை விழா நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து நகர்வீதி வலம் வருதல், 11 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடுதல், மதிய தீபாராதனை, 3 மணிக்கு அம்மன் கேடய சப்பரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து வருதல், இரவு 8 மணிக்கு சிங்காரி மேளம், செண்டை மேளம், கரகாட்டம், இரவு 10 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனையும் தொடர்ந்து அம்மன் பிரம்மசக்தி அம்மன் கோயிலில் இருந்து கேடய சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதல் மற்றும் அம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிங்காரி, செண்டை மேளம், கரகாட்டம், வாண வேடிக்கையுடன் நகர்வீதி வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 14ம் தேதி காலை மற்றும் மதியம் தீபாராதனை, இரவு கரகாட்டம் நடக்கிறது. 15ம் தேதி இரவு 9 மணிக்கு சென்னை வாழ் சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கத்தின் சார்பில் திரைஇசை கலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. 16ம் தேதி இரவு வழக்காடு மன்றம், 17ம் தேதி இரவு சிந்தனை பட்டிமன்றம் நடக்கிறது. 18ம் தேதி இரவு சதீஷ் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி