உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

தூத்துக்குடி : படுவேகமாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் டூவிலரில் சென்றவர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முனியசாமிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பவது மகன் பெரியநாயகம்(37). சம்பவத்தன்று இவர் ராமச்சந்திராபுரத்திற்கு சென்று விட்டு டூவிலரில் தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். தூத்துக்குடியில் இருந்து பேட்மாநகரம் நோக்கி படுவேகமாக சென்ற டிப்பர் லாரி அந்தோணியார்புரம் அருகே வந்து கொண்டிருந்த பெரியநாயகம் மீது மோதியது. படுவேகமாக சென்ற டிப்பர் லாரி டூவிலர் மீது மோதிவிட்டு கட்டுபாட்டினை இழந்து நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் டூவிலரில் சென்ற பெரியநாயகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து மடத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் இளையராஜாவை(33) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை