மேலும் செய்திகள்
வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்
15 hour(s) ago
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்லரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி காதர்பாஷா, 46. இவர், தன் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார்.அறுவடைக்கு தயாரான நிலையில், கரும்பு தோட்டம் நேற்று திடீரென தீப்பிடித்தது. ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள், ஒரு மணி நேரம் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், தீயை அணைக்க முயன்ற போது, தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. பின், வாகனத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வருவதற்குள், தீ மளமளவென பரவி, 3 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறை ஊழியர்களின் இந்த அலட்சிய போக்கால், காதர்பாஷா குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
15 hour(s) ago
04-Oct-2025
01-Oct-2025