உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம்

சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : தொழில் பாதுகாப்பு குழு சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றாத சாய ஆலைகள், திருப்பூரில் மூடப்பட்டுள்ளன. ஆறு மாதமாக மூடப்பட்டுள்ளதால், பனியன் தொழில் முடங்கியதோடு, தொழிலாளர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தொழில் வளத்தை பாதுகாக்கக்கோரி இன்று மாலை 4.00 மணிக்கு, மாநகராட்சி அலுவலகம் முன் தொழில் பாதுகாப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை வகிக்கிறார். மாலை 3.00 மணிக்கு, வணிக நிறுவனங்கள், கம்பெனிகளை மூடி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை