உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு

உடுமலை : உடுமலை அரசு மருத்துவமனையில், திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருமலைசாமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மருத்துவமனையில், சவக்கிடங்கு குளிரூட்டும் வசதி ஏற்படுத்த வேண்டும்; காலியாக உள்ள மருத்துவ பணியாளர்கள் இடங்களை நிரப்ப வேண்டும்; கூடுதல் மருந்தாளுநர் நியமிக்க வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, மாவட்ட இணை இயக்குநர் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலிருந்து 20 மருத்துவ பணியாளர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு பணிமாற்றம் செய்ய உத்தரவிடப்படும் என தெரிவித்தார். தலைமை மருத்துவர் தமிழ்மணி மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர். இத்தகவலை உடுமலை அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ