உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேகத்தடைக்கு வெள்ளை அடித்த நெடுஞ்சாலை துறை

வேகத்தடைக்கு வெள்ளை அடித்த நெடுஞ்சாலை துறை

பொங்கலுார்;முதலி பாளையத்திலிருந்து அவிநாசி பாளையம் வரை செல்லும் ரோட்டில் சமீபத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடைக்கு வெள்ளை அடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். அருகில் வரும் வரை வேகத்தடை இருப்பதே தெரியாமல் போனது. விபத்து நடக்கக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட வேகத்தடையில் சிக்கி பலர் காயமடைந்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் ஒவ்வொரு வேகத்தடைக்கும் வெள்ளை அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ