உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு இரட்டையர்கள் ஆச்சரியம்

கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு இரட்டையர்கள் ஆச்சரியம்

அவிநாசி:அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் உள்ள கொடி காத்த குமரன் நகரில் வசிப்பவர் செந்தில்குமார், 52; உதவி மின் பொறியாளர். இவரது மனைவி ஜெகதா, 47. இவர்களது மகள்கள் வர்ஷிகா, 15, விகாஷினி, 15. இரட்டையர்கள்.இருவரும், மங்கலம் ரோட்டில் உள்ள எம்.எஸ். வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வர்ஷிகா 490 மதிப்பெண்களும், விகாஷினி 493 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதில், இருவரும் கணக்கு பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.விகாஷினி, வர்ஷிகா கூறும்போது, ''படிப்புக்கு உறுதுணையாக இருந்தது பெற்றோர் தான். வழிகாட்டியாக பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி, தாளாளர் ஸ்ரீதா மற்றும் கணக்கு ஆசிரியர் பஞ்சவர்ணம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மிகவும் உதவி புரிந்தனர்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை