உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10ம் வகுப்பு தேர்வு முடிவு திருப்பூர் சாதனை படைக்குமா? 

10ம் வகுப்பு தேர்வு முடிவு திருப்பூர் சாதனை படைக்குமா? 

திருப்பூர், : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. கடந்த முறை, 11வது இடம் பெற்ற திருப்பூர், இம்முறை எந்த இடத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, கடந்த மாதம், 8ம் தேதி வரை நடந்தது. மாவட்டம் முழுதும், 108 மையங்களில், 30 ஆயிரத்து, 620 மாணவர்கள் தேர்வெழுதினர்.விடைத்தாள் திருத்தும் பணி, திருப்பூர் ஜே.எம்.எச்.எஸ்., பள்ளி, தாராபுரம் சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.நாளை (10ம் தேதி) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. கடந்த, 2023ல், 93.93 தேர்ச்சி சதவீதத்துடன், திருப்பூர் மாவட்டம், மாநிலத்தில், 11வது இடம் பெற்றது.கொரோனா 'ஆல்பாஸ்'-க்கு பின், 2022 பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 29வது இடம் பெற்ற திருப்பூர், கடந்த முறை, 18 இடங்கள் முன்னேறி, 11வது இடம் பெற்றது. இம்முறை, முதல் பத்து இடங்களுக்குள் திருப்பூர் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ