உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 வாலிபர்கள் அதிரடி கைது

13 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 வாலிபர்கள் அதிரடி கைது

திருப்பூர்;திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மத்திய பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும் விதமாக வந்த, இருவரை பிடித்து விசாரித்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த மணிருள் காஜி, 31; திருப்பூர், வாவிபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார், 32 என்பது தெரிந்தது. ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்க திட்டமிட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, ஆறு கிலோ கஞ்சாவை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.* திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக, வாவிபாளையத்தை சேர்ந்த மேகநாதன், 23, சிவசங்கர், 22 என, இருவரை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த, ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கஞ்சா சப்ளை கும்பல்கைது செய்யப்பட்ட நான்கு பேரும், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள். மணிருள் காஜி என்பவர், சொந்த ஊரான மேற்கு வங்கத்துக்கு செல்லும் போதெல்லாம் அங்கிருந்தும் மற்றும் நண்பர்கள் மூலமாக ஒடிசா போன்ற மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து, திருப்பூரில் வாவிபாளையம், தோட்டத்துப்பாளையம், நெருப்பெரிச்சல் போன்ற பகுதியில் சப்ளை செய்து வந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ