உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பர்னஸ் ஆயில் கடத்தல்: 2 பேர் அதிரடி கைது

பர்னஸ் ஆயில் கடத்தல்: 2 பேர் அதிரடி கைது

திருப்பூர்:திருப்பூர், பல்லடம் - கோவை ரோடு, அண்ணா நகர் பகுதியில் பர்னஸ் ஆயில் கடத்தல் குறித்த தகவலின் பேரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இதில், டி.எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் துளசிமணி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.அந்த ரோட்டில் நிறுத்தியிருந்த டேங்கர் லாரியை சோதனை செய்து, ஆவணங்களை ஆய்வு செய்தனர். விசாரணையில், அதில் 600லி., பர்னஸ் ஆயிலை கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த டிரைவர் குணசீலன், 50, பர்னஸ் ஆயிலை விலைக்கு வாங்கிய பாலதண்டாயுதபாணி, 65 ஆகியோரை கைது செய்தனர்.அதன்பின், 11,400 லி., பர்னஸ் ஆயிலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.வெளி மார்க்கெட்டில், விற்பனை செய்த, 600 லிட்டர் பர்னஸ் ஆயிலும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ