உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 340 இடங்கள்... 6,000 விண்ணப்ப ங்கள்

340 இடங்கள்... 6,000 விண்ணப்ப ங்கள்

திருப்பூர்:காங்கயத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.காம்., பி.பி.எம்., பி.எஸ்.சி., கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏழு பாடப்பிரிவுகளுக்கு, 340 இடங்கள் உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது முதல் காங்கயம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் விண்ணப்பிக்க துவங்கினர். மொத்தமுள்ள, 340 இடங்களுக்கு, 6,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. இந்நிலையில் 10ம் தேதி கல்லுாரியில் கவுன்சிலிங் நடக்கிறது.கல்லுாரி முதல்வர் நசீம்ஜான் கூறுகையில், ''கவுன்சிலிங் வரும் மாணவ, மாணவியர் கவுன்சிலிங் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்கள், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், நான்கு பாஸ்போர்ட் போட்டோ, தேவையான கல்வி கட்டணம் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ