உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 4ம் கட்ட உயர்கல்வி வழிகாட்டி முகாம்

4ம் கட்ட உயர்கல்வி வழிகாட்டி முகாம்

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2023 - 24ம் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த, அனைத்து மாணவ, மாணவியரும் உயர்கல்விக்கு செல்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத மற்றும் பெற்றோர் இல்லாத மாணவர்கள், கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் உள்ள மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டுவதற்காக, உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.நான்காம் கட்ட உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை முகாம், இன்றும், நாளையும் கலெக்டர் அலுவலக அறை எண்: 705ல் நடக்கிறது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை