திருப்பூர்;கடந்த இருபது நாட் களாக தக்காளி விலை குறையாமல் கிலோ, 40 முதல், 50 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்ந்தது. விலை உயர்ந்த போது, விற்பனை குறையவில்லை. ஒருபுறம் விற்பனை அதிகரித்த நிலையில், வரத்து குறைந்து கொண்டே இருப்பதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வழக்கமாக, தெற்கு உழவர் சந்தைக்கு, 20 முதல், 25 டன் தக்காளி வரும்; நேற்று, பத்து டன்னுக்கு குறைவாக தக்காளி வந்ததால், ஒரு கிலோ, 70 ரூபாயாக விலை உயர்ந்தது. மொத்த விலையில், 26 கிலோ பெரிய கூடை, 1,500 ரூபாயாகவும், 14 கிலோ சிறிய கூடை, 850 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.தக்காளி விலை குறையும் போது, பிற காய்கறி விலை குறையும். தக்காளி விலை உயர்ந்தால், தக்காளி வாங்குவதை தவிர்த்து, பிற காய்கறிகளை வாடிக்கையாளர் வாங்க துவங்குவதால், அவற்றின் விலையும் உயரும்.நேற்று, முள்ளங்கி கிலோ, 40 ரூபாய், வெண்டை, 50, கத்தரி, 80, மாங்காய், 60, பப்பாளி, 30, அவரை, 130, கேரட், 50, பீன்ஸ், 180, புடலை, 40, இஞ்சி, 180, மேரக்காய், 40, பாகற்காய், 70, முட்டைகோஸ், 40, பீர்க்கன், 70, பச்சைமிளகாய், 110, உருளை, 40 ரூபாய்க்கு விற்றது.பெரிய வெங்காயம், 45 ரூபாய், சின்ன வெங்காயம், 50 ரூபாய்க்கு விற்பனையானது. மல்லித் தழை ஒரு கட்டு, 25 ரூபாய், கறிவேப்பிலை ஒரு கட்டு, 15 ரூபாய். கீரை ரகங்கள் விலை ஒரு கட்டு, எட்டு முதல் பத்து ரூபாய் வரை விற்றது.