உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மடத்துக்குளத்தில் 94 மி.மீ., மழை பதிவு

மடத்துக்குளத்தில் 94 மி.மீ., மழை பதிவு

உடுமலை;மடத்துக்குளத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது; அதிகபட்சமாக, 94 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.உடுமலை பகுதிகளில், நேற்று முன்தினம் காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. திருமூர்த்தி, அமராவதி அணைகள் மற்றும் அமராவதி பாசன பகுதிகளில், திடீர் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, குளம், குட்டைகள் நிரம்பின.நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில் 8.20 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அமராவதி அணைப்பகுதியில், 55 மி.மீ., மழையும், திருமூர்த்தி அணை - 48, திருமூர்த்தி ஆய்வு மாளிகை - 45, நல்லாறு - 6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.வரதராஜபுரம் - 11, பூலாங்கிணர் - 2.20, கோமங்கலம் புதுார் - 1.40 மி.மீ., பதிவாகியுள்ளது. மடத்துக்குளத்தில், அதிகபட்சமாக, 94 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !