உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவனுக்கு செவித் திறன் கருவி

மாணவனுக்கு செவித் திறன் கருவி

திருப்பூர்;கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், காது கேட்கும் திறன் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மாணவருக்கு காது கேட்கும் திறன் கருவி பொருத்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4.70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.காது கேட்கும் திறன் கருவியை எம்.எல்.ஏ., விஜய குமார், பாதிக்கப்பட்ட மாணவனிடம் வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மகாராஜ், கணக்கம்பாளையம் ஊராட்சி அ.தி.மு.க., பொறுப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை