உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமைக்கு பதில் குப்பை மலை; பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா

பசுமைக்கு பதில் குப்பை மலை; பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா

அவிநாசி;அவிநாசி பேரூராட்சி, ராயம்பாளையம் செல்லும் வழியில், சக்தி நகர் சிறுவர் பூங்கா உள்ளது.கடந்த 2011ல், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. இப்பகுதி குடியிருப்புகளில் உள்ள முதியவர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் நடைப்பயிற்சிக்கும், விளையாடவும் பயன்படுத்தி வந்தனர். காலை மற்றும் மாலையில் திறக்கப்பட்டு வந்தது. தற்போது மாலையில் மட்டும் திறக்கப்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.மாதம் ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்வதாகவும் எங்கு பார்த்தாலும் குப்பை மலைகளாக கொட்டி வைத்துள்ளனர் என பூங்காவை பயன்படுத்தி வரும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல மாதங்களாக சுத்தம் செய்து கொட்டப்பட்ட குப்பைகளை மலை போல குவித்து வைத்துள்ளனர்.செடிகள் அடர்ந்து, புதர்கள் அதிகளவில் உள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகளவில் அவ்வப்போது பூங்காவில் உலவி வருகிறது. இதனால், குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.பூங்காவில் உள்ள விளையாட்டுச் சாதனங்கள் அனைத்தும் துருப்பிடித்து குழந்தைகள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடும் போது அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளதாக கூறுகின்றனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகம் காலை மற்றும் மாலை வேளையில் பூங்காவை திறந்து நடை பயிற்சி மற்றும் குழந்தைகள் விளையாட ஏதுவாக சுத்தம் செய்து சுகாதாரமாக பூங்காவை பராமரிக்க அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை