உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கனவு இல்லம் பயனாளி தேர்வு செய்ய ஐவர் குழு

கனவு இல்லம் பயனாளி தேர்வு செய்ய ஐவர் குழு

திருப்பூர்:வீடு கட்டும் திட்ட பயனாளிகள் பட்டியலில் விடுபட்டவர்கள், வரும் கிராமசபா கூட்டத்தில் விண்ணப்பிக்க ஊரக வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்துள்ளது.தமிழக அரசின், 'கனவு இல்லம்' திட்டத்தில்,நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட, 3,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால், பயனாளிகளுக்கு, தலா, 3.10 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.நுாறு நாள் திட்ட தொழிலாளியாக இருந்தால், 90 நாட்களுக்கான சம்பளம்; துாய்மை பாரத இயக்கத்தில், 12,000 ரூபாய் என, 360 சதுரடியில் கான்கிரீட் வீடு கட்ட, 3.50 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.தமிழக அரசு, 2019ல் ஏற்கனவே, கணக்கெடுப்பு நடத்தி முடித்து, சொந்த நிலம் உள்ள, வீடற்ற பயனாளிகள் விபரத்தை, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்து உள்ளது.பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வீடு கட்டும் திட்டங்களில் பயனாளிகளாக முடியும் என்ற நிலை தொடர்கிறது.ஊரக வளர்ச்சி அதிகாரிகள் கூறுகையில், 'விடுபட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில், அடுத்த மாதம் நடக்கும் கிராமசபா கூட்டத்தில் விண்ணப்பம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'அதற்காக, பி.டி.ஓ., ஊராட்சி தலைவர் உட்பட ஐவர் அடங்கிய தேர்வு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை