உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதான ரோட்டில் தாழ்வாக அமைந்துள்ள மின் கம்பி

பிரதான ரோட்டில் தாழ்வாக அமைந்துள்ள மின் கம்பி

உடுமலை:உடுமலை அருகே, ரோட்டில் தாழ்வாக அமைந்துள்ள மின் கம்பிகளால் விபத்து அபாயம் உள்ளது. மின் கம்பங்களின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியம், பூளவாடியிலிருந்து உப்பாறு அணை, தாராபுரம் செல்லும் ரோடு உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த ரோட்டில், பொம்மநாயக்கன் பட்டி பகுதியில், ரோட்டில் குறுக்கே அமைத்துள்ள ஓடையை கடக்க, தரைமட்ட பாலம் இருந்தது. வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, தரைப்பாலம் அகற்றப்பட்டு, புதிதாக உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு, இரு புறமும் இணைப்பு ரோடும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், ரோட்டின் குறுக்கே அமைந்துள்ள, மின் கம்பங்கள் உயரம் அதிகரிக்கப்படாததால், மின் கம்பிகள் தாழ்வாக காணப்படுகிறது. இவ்வாறு, 4 மின் கம்பங்கள் உயரம் குறைவாகவும், எட்டி பிடிக்கும் துாரத்தில் காணப்படுகிறது.எனவே, ரோடு மற்றும் பாலம் பகுதியில் அமைந்துள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும், ரோடுகளில் மின் கம்பங்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ