உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுமைய கேரம் போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்

குறுமைய கேரம் போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்

பல்லடம்;பல்லடம் குறுமைய அளவிலான கேரம் போட்டி, 63 வேலம்பாளையத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், 45 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாணவியர் 14 வயது ஒற்றையர் பிரிவில், ப.வடுகபாளையம் அரசு பள்ளி மாணவி ரக் ஷினி, 17 வயது பிரிவில், கண்ணம்மாள் பள்ளி மாணவி ரூபாஸ்ரீ, 19 வயது பிரிவில், பல்லடம் அரசு பெண்கள் பள்ளி மாணவி தனலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவியர், 14 வயது இரட்டையர் பிரிவில், கேத்தனுார் அரசு பள்ளி மித்ரா- - கரோலின், 17 வயது பிரிவில், கணபதிபாளையம் வி.ஏ.டி., பள்ளி காவியாஸ்ரீ- - விஜயதர்ஷினி வெற்றி பெற்றனர்.மாணவர், 17 வயது பிரிவில், ப.வடுகபாளையம் அரசு பள்ளி கவி விஷ்ணு, 19 வயது பிரிவில், சாமளாபுரம் லிட்ரசி பள்ளி விஷ்ணு பிரசாந்த், மாணவர் 14 வயது இரட்டையர் பிரிவில், ப. வடுகபாளையம் பள்ளியை சேர்ந்த மதன்- - வசீகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி