உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளம்பர பேனர் அகற்றம்; மாநகராட்சி அதிரடி

விளம்பர பேனர் அகற்றம்; மாநகராட்சி அதிரடி

திருப்பூர்;ராயபுரம் பகுதியில், பொது இடங்களில் அமைத்திருந்த பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அனுமதியற்ற முறையில், விளம்பர பேனர்கள் வைக்கப் படுவது வாடிக்கையாக உள்ளது. அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில், விழாக்கள் மற்றும் விளம்பரங்கள் குறித்த பேனர்கள் ரோட்டோரங்களில் வைக்கப்படுகிறது. இது போன்ற பேனர்களால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. விபத்துகள் நேரிடுவதும் சகஜமாக உள்ளது.மாநகராட்சி, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தியும், அனுமதியற்ற பேனர்கள் அமைக்கப் படுவது தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், ராயபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் விளம்பர பேனர்களை ஏராளமாக அமைத்திருந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் இருந்த அனுமதியற்ற பேனர்களை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை