உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதியில் குடிநீர் எடுப்பு அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு

அமராவதியில் குடிநீர் எடுப்பு அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு

வெள்ளகோவில்:வெள்ளகோவில், புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய குழு தலைவர் தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மூலனுார் பேரூராட்சியில் அம்ரூத் 2.O திட்டத்தின் கீழ், அமராவதி ஆற்றில் நீர் உறிஞ்சு கிணறு அமைக்க இடம் தேர்வு நடந்தது. இதற்காக, ஆற்றில் குழி அமைக்க வெள்ளக்கோவில் ஒன்றியம் புதுப்பை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அமராவதி ஆற்றில் இடம் தேர்வு செய்யப்பட்டது.ஆற்றின் நடுப்பகுதியில், கிணறு தோண்டும் பணி துவங்கியது. இதற்கு புதுப்பை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆற்றில் கிணறு தோண்டினால் அருகில் உள்ள கிணறுகளில் நீர் ஆதாரம் குறைந்து விடும்.இதனை கைவிட வேண்டும் எனக் கோரி, வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுதர்சன் வெங்கடேஷன் தலைமையில் அ.தி.மு.க., வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !