உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுரை

அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுரை

உடுமலை:மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று திரும்பும் வகையில், நடையிழப்பின்றி அனைத்து பஸ்களும் இயக்க வேண்டும் என, டிரைவர்களுக்கு போக்குவரத்து கழகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், அரசு டவுன் பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஆசிரியர், கல்வித்துறை சார் அலுவலர், மாணவ, மாணவியர் என பலரும், பஸ்களில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு காலை, மாலை வேளையில் பயணிக்கத்துவங்கியுள்ளனர்.போக்குவரத்து கழகம் தரப்பில் இருந்து, அரசு பஸ் டிரைவர், நடத்துனர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலில், ''மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று திரும்பும் வகையில் நடையிழப்பின்றி அனைத்து பஸ்களும் இயக்க வேண்டும்.காலை, மாலை நேரங்களில் ஏற்கனவே முந்தைய கல்வியாண்டில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் படி, அதிக மாணவர் பஸ் பயன்படுத்தும் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பஸ் முழுமையாக இயக்க வேண்டும். அனைத்து பகுதிக்கு மாற்று பஸ்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,' எனக் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !