உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகரம் மருத்துவமனையில் அற்புத சேவை குறைந்த கட்டணம்; நிறைவான சிகிச்சை

அகரம் மருத்துவமனையில் அற்புத சேவை குறைந்த கட்டணம்; நிறைவான சிகிச்சை

திருப்பூரில் குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சையை அகரம் மருத்துவமனை வழங்கி வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான மருத்துவ மனைகள் செயல்பட்டு வந்தாலும், மக்களின் ஆதரவை ஒரு சில மருத்துவமனைகளே பெற்றுள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு மக்கள் சென்று தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.அவ்வகையில், திருப்பூர் மாநகர மக்களின் ஆதரவு மற்றும் நன்மதிப்பை பெற்று அகரம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.திருப்பூர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம்ஆர்.வி.இ., லே-அவுட்டில் அகரம் மருத்துவமனை செயல்படுகிறது.இந்த மருத்துவமனையில் லேப்ராஸ்கோப்பி மற்றும் பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை கால் நோய் சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் விபத்து சிகிச்சை, சிறுநீரக கற்கள் அறுவை சிகிச்சை, பெண்கள் நல மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம், காது, மூக்கு தொண்டை சிகிச்சை, மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை, இயன்முறை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு நவீனங்கள்

மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஆபரேஷன் தியேட்டர்கள், யு.எஸ்.ஜி., எண்டோஸ்கோப்பி, நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகம், மருந்தகம், எக்ஸ்ரே எடுக்கும் வசதி, பிசியோதெரபி என, அனைத்து சிகிச்சை மற்றும் வசதிகளும் உள்ளது. இதுபோல் இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது.மக்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை நவீன வகையிலும், நிறைவான கட்டணத்திலும் அகரம் மருத்துவமனையில் பெறலாம் என சர்க்கரை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் பாபு, தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கீர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.மேலும், இதுதொடர்பான தகவல்களை 82208-88515, 82208-88525 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி