உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் போட்டியால் ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை மற்றொரு டிரைவர் கைது

தொழில் போட்டியால் ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை மற்றொரு டிரைவர் கைது

உடுமலை : உடுமலை அருகே, தொழில் போட்டியால், ஆம்புலன்ஸ் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை அருகேயுள்ள, ஜல்லிபட்டியைச்சேர்ந்த, சரவணன், 36. ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ள அவர், கடந்த 16ம் தேதி குறிச்சிகோட்டை அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே வந்துள்ளார்.அப்போது, மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவரான குறிச்சிக்கோட்டையைச்சேர்ந்த ராஜ்குமார், 33, ஆகியோருக்கும், முன் விரோதம் காரணமாக, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில் அங்கிருந்த பெரிய அளவிலான சுத்தியலை எடுத்து, சரவணன் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.இதில், தலை பலத்த சேதமடைந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சரவணனை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன், நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டி காரணமாக, ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணனை, ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த, ராஜ்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.ஒரே பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்குள், தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை