உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை

தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை

அனுப்பர்பாளையம்:குன்னத்துார் அடுத்த சின்னேகவுண்டன் வலசு ஊராட்சி, கருங்கல் மேடு பகுதியில் உள்ள முட்புதரில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதியினர் குன்னத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. அவருக்கு, 60 வயதிருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அருகில் மதுக்கடை உள்ளது. மது குடிக்க வந்தவருக்குள் மோதல் ஏற்பட்டு கொலை நடந்ததா அல்லது வழிப்பறியில் கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை