உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அண்ணாமலை வாழ்த்து கடிதம்

அண்ணாமலை வாழ்த்து கடிதம்

பல்லடம் : பல்லடம் யுனிவர்சல் பள்ளி மாணவி மகாலட்சுமிக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அனுப்பிய கடிதம்:பிளஸ் 2 தேர்வில், 598 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று கொங்கு மண்டலத்துக்கும், பல்லடம் பகுதிக்கும் பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். நீங்கள், ஒரு உந்து சக்தியாக, முன்மாதிரியாக திகழ்கிறீர்கள். கடின உழைப்பும் கவனப் பயிற்சியும் விடாமுயற்சியும் வெற்றிக்கான அடிப்படை என்பதை வெற்றிகரமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.தங்களின் தன்னலமற்ற உழைப்பு, இதற்கு மேலும் பல உயரங்களையும் உன்னதங்களையும் நல்கி, வருங்காலத்தில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், சமுதாயத்துக்கும் தொண்டு செய்து வாழ வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ