உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுந்தீவன உற்பத்திக்கு மானியம் வழங்க எதிர்பார்ப்பு

பசுந்தீவன உற்பத்திக்கு மானியம் வழங்க எதிர்பார்ப்பு

உடுமலை;தீவனப்புல் வளர்ப்புக்கான, தெளிப்பு நீர் பாசன கருவிகளுக்கு கால்நடைத்துறை வாயிலாக மானியம் வழங்கினால், பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கும் என கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக கறவை மாடுகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், கிராமங்களில், மேய்ச்சல் நிலங்கள் குறைந்துள்ள நிலையில், விளைநிலங்களில், தீவனப்புல் வளர்த்து, கால்நடைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.பால் உற்பத்தி சீராக இருக்க, கறவை மாடுகளுக்கு, பசுந்தீவனம் அளிப்பது அவசியமாகும். போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில், நீர் சிக்கனத்துக்காக, தீவனப்புல் வளர்க்க, தெளிப்பு நீர் பாசனம் அமைக்க வேண்டியுள்ளது.இதற்காக அதிக செலவு பிடிக்கும் என்பதால், கால்நடைத்துறை சார்பில், முன்பு, தீவனப்புல் விதைகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வந்தன.தற்போது, தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி உதவ வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை