உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கலைக்கல்லுாரியில் விண்ணப்பம் வினியோகம்

அரசு கலைக்கல்லுாரியில் விண்ணப்பம் வினியோகம்

உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கல்வியாண்டு 2024 - 25க்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகின்றன.அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகள் உள்ளன.முதல் ஷிப்ட்டில் 19 பாடப்பிரிவுகள், இரண்டாம் ஷிப்ட்டில் மூன்று பாடப்பிரிவுகளும் உள்ளன. சேர்க்கைக்கான பதிவுகளை www.tngasa.inஎன்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சேர்க்கைக்கான பதிவு மே 6 முதல் நடக்கிறது.மாணவர்கள், மொபைல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் வாயிலாக, சேர்க்கை பதிவு செய்யலாம். கல்லுாரியிலும், மாணவர்கள் சேர்க்கைகான தகவல் வழிகாட்டு மையம் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படுகிறது.மாணவர்கள் முதலில் பெயர், இமெயில் முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட விபரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். பின், கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். விண்ணப்ப பதிவு, பதிவு கட்டணம் குறித்து, தகவல் பெறுவதற்கு கல்லுாரி வழிகாட்டி மையங்களை அணுகலாம்.இத்தகவலை, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை