| ADDED : ஏப் 30, 2024 11:18 PM
உடுமலை:ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பிரிவில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ், கோவை, சாய்பாபா காலனியில் ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்படுகிறது.வரும் கல்வியாண்டில், கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ (டி.கோ.ஆப்.) பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான முன் பதிவு துவங்கியுள்ளது. செப்., மாதம் முதல் ஓராண்டு காலம் இப்பயிற்சி நடைபெறும்.இரு பருவங்களாக பாடம் மற்றும் தேர்வுகள் நடைபெறும். தமிழ் வழிப் பாடம் மட்டும் நடத்தப்படும். இதில் மாணவர் சேர்க்கை குறித்த விபரங்கள், கட்டணம், தகுதி, நிபந்தனை ஆகிய விபரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சேர்க்கைக்கு www.tncuicm.comஎன்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, முதல்வர், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், டாக்டர் அழகேசன் ரோடு, சாய்பாபா காலனி கோவை, 11 முகவரி அல்லது 0422 244 2186 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.