உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரம் வளர்ப்பு லாபகரம் அழைக்கிறது வனம்

மரம் வளர்ப்பு லாபகரம் அழைக்கிறது வனம்

பல்லடம்;மரம் வளர்ப்பு விவசாயம் செய்து பயன்பெற, விவசாயிகளுக்கு பல்லடம் 'வனம்' அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இதன் செயலாளர் சுந்தர்ராஜ் அறிக்கை:இன்றைய சூழலில், விவசாயம் மூலம் லாபம் ஈட்ட முடியவில்லை என்பதே விவசாயிகளின் பலரின் எண்ண ஓட்டமாக உள்ளது. மர விவசாயத்தின் மூலம் விவசாயிகள் அதிக லாபம் ஏற்ற முடியும். இலவச மண் பரிசோதனை செய்து, குழி தோண்டி, உரமிட்டு, மண்ணுக்கு ஏற்ற மரக்கன்றுகள் மட்டுமே நடவு செய்து தர 'வனம்' அமைப்பு தயாராக உள்ளது. இதற்கு, விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைத்திருத்தல் வேண்டும். சொட்டுநீர் பாசன வசதி, தண்ணீர் மற்றும் பராமரிப்பு வசதி ஆகியவை இருக்க வேண்டும். பெரிய அளவு பராமரிப்பு செலவுகள் இன்றி, மரம் வளர்ப்பு விவசாயம் என்பது, விவசாயிகளுக்கு மிகவும் லாபகரமானதாகவே இருக்கும். இதில் விருப்பம் உள்ள விவசாயிகள், 90435 96977 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ