உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிய யோகாசன போட்டி: கே.எம்.சி., பள்ளி சாதனை

ஆசிய யோகாசன போட்டி: கே.எம்.சி., பள்ளி சாதனை

திருப்பூர்:ஆசிய - பசிபிக் யோகா போட்டியில், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி மாணவி சாதனை படைத்தார்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மூன்றாவது ஆசிய - பசிபிக் யோகா போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அவிநாசி பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளி மாணவி சஸ்ருதா, மூன்றாம் பரிசு பெற்றார். சாதித்த மாணவி, பயிற்சியாளர் ஜாவித், உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யா, சம்பத் ஆகியோரை, பள்ளி தலைவர் சண்முகம், பள்ளி தாளாளர் மனோகரன், பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா, பள்ளி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை