உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சக்தி விக்னேஸ்வரா பள்ளியில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

சக்தி விக்னேஸ்வரா பள்ளியில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

திருப்பூர்: பொங்குபாளையம், ஸ்ரீபுரம் சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலையத்தில், ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் சக்திவேலுசாமி வரவேற்றார். பள்ளி தாளாளர் மயிலாவதி சக்திவேலுசாமி, தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இயற்கை ஆர்வலர் வேலுசாமி, களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்று, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு, 2,000 மரக்கன்று வழங்கினர்.'மழையின்றி மனிதர்கள் வாழ முடியாது; மழை வளம் பெருக மரக்கன்று நட வேண்டும்' என, அறிவுறுத்தினர்.'கடந்த, 19 ஆண்டுகளாக, ஆடிப்பெருக்கின் போது மாணவ, மாணவியருக்கு மரக்கன்று வழங்குவது வழக்கம்; இதுவரை, 52 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். வேங்கை, பலா, மருது, கொய்யா, மாதுளை, மருதாணி, மகிழம் என, மண்ணுக்கேற்ற மரங்கள் வழங்கப்பட்டுள்ளன' என, நிர்வாகத்தினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி