உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில அளவில் சாதனைவிவேகானந்தா பள்ளி அசத்தல்

மாநில அளவில் சாதனைவிவேகானந்தா பள்ளி அசத்தல்

திருப்பூர் : திருப்பூர், முத்துார் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.மாணவியர் ஜயந்திகா, பூவிதா ஆகியோர், 500க்கு 498 மதிப்பெண் பெற்று, திருப்பூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளனர். மாணவியர் இருவரும், தமிழ், ஆங்கில பாடத்தில், 99 மதிப்பெண்; கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.மாணவியர் பால சந்தியா, பிரவீனாஸ்ரீ ஆகியோர், 500க்கு 497 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி ராகவர்த்தினி, 496 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.மேலும், 490 மதிப்பெண்ணுக்கும் மேல் 17 பேர்; 480க்கும் மேல், 26; 470க்கு மேல், 42; 450க்கு மேல் 51; 400க்கு மேல், 71 மாணவ, மாணவியர் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 40 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.சாதித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் சண்முகம், ரொக்கப்பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். பள்ளி செயலர் சக்திவேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார், பள்ளி முதல்வர் நடராஜ், ஆசிரியர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை பத்மபிரியா, நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை