உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற தீர்த்தக்குட ஊர்வலம்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற தீர்த்தக்குட ஊர்வலம்

திருப்பூர்:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர், கடந்த, எட்டு ஆண்டுகளாக தமிழ்ப்புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாளன்று, தீர்த்தக்குட ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இந்தாண்டு, மேட்டுப்பாளையம், வனபத்ர காளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, அவரவர் பகுதிகளிலுள்ள விநாயகர் கோவிலில் அபிேஷகம் செய்து, பொங்கல் வைத்து, 'அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும்,' என பிரார்த்தனை செய்தனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், ''அத்திக்கடவு திட்டம், அரை நுாற்றாண்டு கடந்த கனவு திட்டம். கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றிருக்கிறது.திட்டத்தின் கீழ் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள கடைசி குளம், குட்டைக்கு நீர் சென்று சேரும் வரை, தீர்த்தக்குட ஊர்வலம் எடுக்கும் வேண்டுதல் தொடர்ந்து நடத்தப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை