உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரம் வெட்டியதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

மரம் வெட்டியதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

திருப்பூர்:ரோட்டோரம் இருந்த மரத்தை வெட்டி அகற்றுவதை தட்டிக் கேட்டு தடுக்க முயன்றவர் மீது தாக்குதல் நடந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் ஜெய் நகரைச் சேர்ந்தவர் தனபால், 55. நேற்று முன்தினம் அவர் வீடுள்ள வீதியில், அவர் வீட்டுக்கு எதிரே ரோட்டோரம் இருந்த ஒரு மரத்தை வெட்டி அகற்றும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.அங்கு வந்த தனபால் மரத்தை வெட்டிய நபர்களிடம் இது குறித்து கேட்டு, தடுக்க முயன்றார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அந்நபர்கள் மரத்தை வெட்டி கீழே வீழ்த்தி விட்டுச் சென்று விட்டனர். குமார் என்பவர் வீட்டுக்கு பின்புறத்தில் இந்த மரம் இருந்துள்ளது. நேற்று காலை அவர் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த குமார் மற்றும் அவர் குடும்பத்தினர் இது குறித்து தனபாலிடம் கடுமையாகப் பேசியதோடு அவரை சரமாரியாகத் தாக்கி மிரட்டல் விடுத்தனர். தனபால் மனைவியையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.இந்த இரு சம்பவங்களும், தனபால் வீட்டு முன்புள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் நிலை குலைந்த தனபால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து நல்லுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.இயற்கை ஆர்வலர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்தை இயற்கை ஆர்வலர்கள் பலரும் கண்டித்துள்ளனர். இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.தனபால் மீது தாக்குதல் நடந்த சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி