உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி - அன்னுார் நான்கு வழி சாலைப்பணி

அவிநாசி - அன்னுார் நான்கு வழி சாலைப்பணி

அவிநாசி: அவிநாசி - அன்னுார் ரோட்டை அகலப்படுத்தும் பணிகளுக்காக கருவலுாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலம் கட்டும் பணிகள் துவங்கியது. தற்போது நான்கு வழி சாலையாக்கும் திட்டத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு 'கல்வெர்ட்' அமைக்க பணிகள் துவங்கியுள்ளது.இதற்காக இரு புறங்களிலும், உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்கள், வீடுகள், வணிக கடைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.அவிநாசியிலிருந்து அன்னுார் செல்லும் ரோடு குறுகிய பாதையாக பல ஆண்டுகளாக உள்ளது. இதனை இரு வழிப் பாதையாக அகலப்படுத்த கோரி பல்வேறு துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மனு அளித்து வந்தனர். தற்போது அதற்காக முதல் கட்டமாக சாலை பாதுகாப்பு திட்ட நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கருவலுாரில் பஸ் ஸ்டாப் அருகில் பாலம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ