திருப்பூர்:திருப்பூர் வடக்கு குறுமைய மாணவர் கால்பந்து போட்டி, கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் சங்கர் போட்டிகளை துவக்கி வைத்தார். மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில், ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி - காந்தி நகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின. இதில், 4 - 2 என்ற புள்ளிக் கணக்கில், ஜெய்சாரதா பள்ளி அணி வெற்றி பெற்றது.மற்றொரு அரையிறுதி போட்டியில், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி அணி - பிஷப் மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின, இதில், 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி வெற்றி பெற்றது. அரையிறுதி போட்டிகளை தொடர்ந்து, இறுதி போட்டிக்கு, காந்தி நகர், ஏ.வி.பி., பள்ளி - இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி அணிகள் தகுதி பெற்றது. ஆனால், மழையால், போட்டி ஒத்திவைக்கபட்டது.திருப்பூர் ஜெய்சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வடக்கு குறுமைய கபடி போட்டி நேற்று நடந்தது. 14 வயது பிரிவில், 22, பதினேழு வயது பிரிவில், 17, பத்தொன்பது வயது பிரிவில், 12 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கேற்றுள்ள அணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நாக்-அவுட் முடிந்து, காலிறுதி சுற்று என்ற நிலைக்கு வரவே, மதியம் கடந்தது. அதற்குள் மழை குறுக்கிட்டதால், அரையிறுதி, இறுதிபோட்டி இரண்டும் தேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்பட்டது.----வடக்கு குறு மைய கால்பந்து போட்டி, திருப்பூர் கணியாம்பூண்டி மைக்ரோ கிட்ஸ் பள்ளியில் நடந்தது. அதில் பிஷப் மெட்ரிக் பள்ளி - வெற்றி வித்யாலயா பள்ளி அணிகள் மோதின.திருப்பூர், சிறுபூலுவபட்டி ஜெய்சாரதா வித்யாலயா பள்ளியில் நடந்த வடக்கு குறுமைய கபடிப்போட்டியில், காந்தி நகர், ஏ.வி.பி., பள்ளி மற்றும் வெற்றி வித்யாலயா பள்ளி அணிகள் மோதின.