உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் சாதனை புரியும் ஏ.வி.பி., பள்ளி மாணவர்கள்

தொடர் சாதனை புரியும் ஏ.வி.பி., பள்ளி மாணவர்கள்

திருப்பூர் : திருமுருகன்பூண்டியில், ஏ.வி.பி., டிரஸ்ட் நேசனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அம்மாணவர்களைப் பாராட்டி, பள்ளி தாளாளர் கார்த்திகேயன் கேடயம் வழங்கினார். பள்ளி முதல்வர், ஒருங்கிணைப்பாளர், மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை