உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரமற்ற தார் ரோடு; மக்கள் குற்றச்சாட்டு

தரமற்ற தார் ரோடு; மக்கள் குற்றச்சாட்டு

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட பகுதி கொக்குப்பாறை. இங்கு பிரதான வீதி, கிரீன் அவென்யூ, சக்தி கார்டன், திருமலை வி.ஐ.பி., குடியிருப்பு பகுதி ஆகிய பகுதிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், 89 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கடந்த சில நாள் முன் துவங்கிய இப்பணி தொடர் மழை காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உரிய தரத்துடன் தார் ரோடு இல்லை என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:இப்பகுதியில் மண் ரோடு இருந்தது. தற்போது, தார் ரோடு போடும் பணி நடக்கிறது. 'எர்த் ஒர்க்' எனப்படும் பாதை சமன் செய்யும் பணி முடிந்து அதன்மீது, 'வெட் மிக்ஸ்' (ஜல்லி மண் கலவை) பரப்பி சமன் செய்யப்படும். அப்பணி தான் இன்று (நேற்று) துவங்கி தற்போது நடக்கிறது.வாகனங்கள் அனுமதித்து, சாலை சமன் செய்து, ஜி.எஸ்.பி., கலவை பரப்பி, அதன்பின் தார் ரோடு அமைக்கப்படும். ரோடு பணி முறையாக கண்காணிக்கப்பட்டு, பணி முடிந்து உரிய தர பரிசோதனைக்குப் பின் ஒப்பந்தாரருக்கு தொகை விடுவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை