உடுமலை : பெங்களூரு - கோவை ரயிலை, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநி வரை நீடிக்க வேண்டும், என கோவை - திண்டுக்கல் ரயில்வே பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.கோவையிலிருந்து, திண்டுக்கல் வரையிலுள்ள, கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய நகரங்களிலுள்ள பயணிகள் நலச்சங்கங்கள் இணைந்து, கோவை - திண்டுக்கல் வழித்தட ரயில் பயணிகள் நல சங்கங்கள் இணைந்து அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பு கூட்டம், உடுமலை, தொழில் வர்த்தக சபை வளாகத்தில் நடந்தது. இதில், கோவை -- தாம்பரம் - - கோவை வாராந்திர ரயில் இயக்க வேண்டும். மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயிலை, பழநி, பொள்ளாச்சி வழியாக கோவை வரை நீட்டிக்க வேண்டும்.கோவை -- மதுரை ரயில் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் இரண்டு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக, கோவை -- ராமேஸ்வரம் ரயிலாக இயக்க வேண்டும்.மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக, திண்டுக்கல் -- கோவை மெமு ரயிலை காலை , மாலை என இரு நேரங்களில் இயக்க வேண்டும்.மேலும், பெங்களூர் -- கோவை ரயிலை பொள்ளாச்சி வழியாக பழநி வரை நீடிக்கவும், மதுரை -- திருப்பதி ரயிலை, பழநி, பொள்ளாச்சி, கோவை வழியாக இயக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ரயில் பயணிகள் நல சங்க தலைவர் தேவதாஸ், செயலாளர் சிவமோகன், பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.